உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
நேற்று (01) இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இரண்டு நாள் விவாதத்தினை கோரியிருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனடிப்படையிலேயே இரண்டு நாள் விவாதம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
