நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் வருகை மிக அதிகமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ச்சியாக ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி பிரான்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
