2012 இல் வெளியான “3” படம் மூலம் இயக்குனராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கினார்.
அதன் பிறகு பயணி என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீனு அரோரா தயாரிப்பில் ‘ஓ சாத்தி சால்’ என்ற இந்தி படத்தை இயக்கவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதன் பேர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
