வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான வீட்டு காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த நிலையிலான மோட்டார் குண்டு ஒன்று நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளரால் குண்டு இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
