லெபனானில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் உறவினர்களை அடையாளம் காண்பதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளது.
இலங்கையை சேர்ந்த ஜெயசூரியகே பிரியந்திகா நீலகந்தி என்ற பெண் நேற்று (01) லெபனானில் உயிரிழந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்களை அடையாளம் காண வெளிவிவகார அமைச்சு விபரங்களை வெளியிட்டு உதவிகோரியுள்ளது.
அடையாள அட்டை இலக்கம்: 797631574v
கடவுச்சீட்டு எண்: N5758240
முகவரி : 117, யாயா 06, வரவெவ, சிலாவ் & 247/3, ஹபரகட, ஹோமாகம.
இதேவேளை, உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள், அமைச்சகத்தின் நேரடி தொலைப்பேசி இலக்கம் 011238836 / 0117711163 / 0112323015 அல்லது அதன் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
