நல்லூர் பகுதியல் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான நபர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் தலைமறவாகியிருந்தார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாளும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
