கனடாவில் நிரந்தர குடியுரிமை மற்றும் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
