வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (03) ஆரம்பமாகின்றது.
யாழ்.மாவட்டப் பொறுப்பாளர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் கச்சத்தீவு மகா மாங்கல்யத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருவிழாவிற்கான போக்குவரத்து, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான இன்றைய இரவு உணவு, நாளைய காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்குபற்றும் இலங்கை பக்தர்களுக்காக யாழ்ப்பாணம் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து இன்று கடற்படை படகு சேவையை நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
