நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதியமைச்சருக்கும், திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
