யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக “தேர்தலை உடன் நடத்து” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (03) போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
“மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து”, “பொருட்களின் விலையை குறை”, “உள்ளூராட்சி தேர்தலை உடன் நிறுத்து”, “வடபகுதி கடல் வளத்தை இந்தியாவிற்கு விற்காதே”, “உழைக்கும் மக்களை சுரண்டாதே” என பல்வேறு கோசங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.
