இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
