பிறப்பு – 29.11.1980
இறப்பு – 03.03.2023
மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா பிறேமதர்சன் அவர்கள் 03.03.2023 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் சுமித்திரா அவர்களின் கணவரும், காலஞ்சென்ற தங்கராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் தங்கரத்தினம் தம்பதிகளின் மருமகனும்,
கவீனா, பிரணவன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
றமேஸ்வரி, றமேஸ் கலீபா, தங்கேஸ்வரன், தங்கத்துரை, பிரேமதர்சினி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயராசசிங்கம், தவராசா, சிவலிங்கம், லதா, மஞ்சுளா, ஜெனிற்றா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
கஜன், கவில், நிரோசன், நிதுசன், பிரதாப், பியூலா, எப்சியா, அபிஷாக், பிறிஸ்கில்லா, ரெலக்சன், டானியல், றொசாலினி, றொபேக்கா, சோபா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.03.2023 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
