தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (04) அனுஷ்டிக்கப்பட்டது.
மார்ச் 04ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10ஆம் திகதி வரை சர்வதேச ரீதியில் உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
அவ்வகையில், இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உலக உடற்பருமன் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில், வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், நோயாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
