மேடம் – அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
நீண்ட நாள் முயற்சிக்குப்பின் எண்ணம் நிறைவேறும். தாய் வழி உறவுகள் உதவி புரிவார்கள்.
இடபம் – நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் உதவி புரிவார்கள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதிய முயற்சி ஒன்று பலிதமாகும்.
மிதுனம் – பேச்சில் கவனம் தேவை. நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும். மற்றவர் செயல்பாடு உங்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அமைதி காப்பது நன்மையாகும்.
கடகம் – வேலைப்பளு அதிகரிக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம் – வீட்டில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். சிலர் சொத்து வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்.
அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்படுங்கள்.
கன்னி – எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
பொருளாதார நெருக்கடி தீரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதிநிலை உயரும்.
துலாம் – வியாபாரத்தில் இருந்த தடைகளை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவார்கள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இன்று இழுபறியாகும். அந்நியரிடம் எச்சரிக்கை அவசியம்.
விருச்சிகம் – உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் ஒரு செயல் சாதகமாகும்.
முன்னோர்கள் அருளினால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்குரிய அறிகுறி உண்டாகும்.
தனுசு – வெளியூர் பயணத்தால் சங்கடங்கள் உண்டாகும். முயற்சிகள் இழுபறியாகும். கவனம் தேவை. எதிர்பார்ப்பில் இழுபறி நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடியால் சங்கடம் தோன்றும்.
மகரம் – எண்ணம் நிறைவேறும். விரும்பியதை இன்று அடைவீர்கள். இலாபமான நாள்.
வாழ்க்கைத் துணையால் உங்கள் செயல்கள் வெற்றியாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் – எதிரிகளால் உண்டான தொல்லைகள் நீங்கும். விலகிச் சென்றவர்கள் உங்களைத் தேடி வருவர். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். அந்நியர்களின் உதவி கிடைக்கும்.
மீனம் – பூர்வீக சொத்து பிரச்னையில் முடிவு தோன்றும். குழந்தைகள் குறித்த கவலைகள் வந்து செல்லும்.
அந்நியர் உதவியுடன் வியாபாரத்தில் உண்டான பிரச்னையை சரி செய்வீர்கள்.
