திருகோணமலை, வெருகல் – ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேற்று (04)விஜயம் மேற்க்கொண்டனர்.
இவ்விஜயத்தின் போது குறித்த வைத்தியசாலை எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்தனர்.
இதன்போது, வைத்தியசாலையில் வளாகத்தை காட்டு யானைகள் சேதப்படுத்துகின்றமை, வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு, ஆளணி பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை வைத்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தினர்.
