ஜக்கிய மக்கள் சக்தியினரால் புத்தளம் – பாலாவி பகுதியில் தீப்பந்தப் போராட்டம் நேற்று (04) மேற்க்கொள்ளப்பட்டது.
மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மற்றும் முன்னால் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
