யாழ்.சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 03.03.2023 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு நிகழ்வில் பழைய மாணவர்களிற்கான ஓட்டப் போட்டியில் சுவராஸ்சியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஓட்டப்போட்டியில் பழைய மாணவிகள் பலர் பங்கு பற்றியிருந்தனர். ஆயினும் அதில் சிறப்பு யாதெனில் அந்த பழையமாணவர் ஓட்டப்பந்தயத்தில் குறித்த பாடசாலையில் படித்த 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டமை பார்வையாளர்களுக்கு புதுவித ஊக்குவிப்பை ஏற்படுத்தியது.
இளம் பழைய மாணவிகளுடன் போட்டி போட்டு ஓடி தனது திறமையினையும், சாதனை படைக்க வயது எந்த தடையும் இல்லை என்பதனையும் நிரூபித்து காட்டிய மூதாட்டி புனிதவதி முதல் இடத்தைப் பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார்.
