யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவிற்கான தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளராக சொலமன் சிறில் தெரிவாகியுள்ளார்.
இன்று (05) காலை இடம்பெற்ற யாழ்.மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலே குறித்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வர் தெரிவு எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
