யாழில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (05) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்குள்ள மரம் ஒன்றில் கயிற்றினை கட்டி அதில் தொங்கி உயிர் மாய்த்துள்ளார்.
அவரது கையில் உள்ள வசனங்களை பார்வையிட்ட பொலிஸார், காதல் தோல்வியால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்தனர்.
