முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (06) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வு கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பொது ஈகை சுடரினை மாமனிதர் கிட்ணன் சிவனேசன் அவர்களுடைய புதல்வி தாட்சாயினி சிவனேசன் ஏற்றினார். இதைத்தொடர்ந்து அவரது திருவுருவ படத்திற்க்கு மாமனிதர் அவர்களது புதல்விகள் மலர்மாலை அணிவித்தனர்.
மாமனிதர் சிவநேசன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வந்த காலத்தில் 2008ஆம் ஆண்டு இதே நாளில், மாங்குளம் குஞ்சுக்குளம் பகுதியில் வைத்து கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
