ஊரெழு ஶ்ரீ அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கான புதிய தேர்முட்டி (தேர் மண்டபம்) அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வும், அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஆலய நிர்வாகச சபைத்தலைவர் ஞா.பாஸ்கரன் தலைமையில் இன்று (06) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஆலய குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், கிராம மக்கள் எனப் பலர் தேர் முட்டிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேர்முட்டி அமைப்பதற்கான நிதிப்பங்களிப்பானது ஆலய நிர்வாக சபையினராலும், கிராம மக்களின் பங்களிப்போடு மேற்க்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இவ்வாலயத்திற்கு ஒரு கோடி ரூபா செலவில் புதிய தேர் அமைக்கப்பட்டு வருவதாக ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்தனர்.
அமைக்கப்பட்டு வரும் புதிய தேருக்கு ஊரெழு கிராமத்தைச் சேர்ந்தவரும், தற்போது கனடா நாட்டில் வசித்து வருபவருமான சின்னத்தம்பி சிவராஜா முழுமையான நிதிப்பங்களிப்பை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதுடன், அவருடைய சமூகப்பணிக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.
