வவுனியாவில் ஒரு இளம் குடும்பமே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள துயரச்சம்பவம் பதிவாகியுள்ளது.
வவுனியா – குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளிட்ட நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும் தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
