தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் பேருந்தும் டாக்ஸியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டாக்ஸி நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்தும், டாக்ஸியும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில், படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
