கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை. குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
