மட்டுவில் தெற்கு வளர்மதி பாலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 08.03.2023 (நாளை – புதன்கிழமை) மாலை 2.30 மணிக்கு மட்டுவில் வளர்மதி வி.கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வளர்மதி சனசமூக நிலையத் தலைவர் சி.தனுசன் தலைமையில் நடைபெறும் இவ் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.நா.சிவமலர் (உப அதிபர் – யா/கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை) கலந்து சிறப்பிக்க உள்ளார்.
சிறப்பு விருந்தினராக க.கிருஷ்ணரட்சகன் (பொதுச் சுகாதார பரிசோதகர் மட்டுவில்) அவர்களும், கெளரவ விருந்தினராக திருமதி.லி.அனோஜா (வளர்மதி பாலர் முன்பள்ளி நலன் விரும்பி) அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
பாலகர்களின் விளையாட்டு நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்தி வளர்மதி சனசமூக நிலையமும், அதன் உப அமைப்புக்களும் அனைவரையும் அழைத்து நிற்கின்றார்கள்.
