சாவகச்சேரியில் திருமணம் ஒன்று பொருத்தம் சரிவந்த நிலையில், பெண்பார்க்கப் போன இடத்தில் ஒரு நகைச்சுவையான கதையால் அந்த திருமணம் குழம்பிய உண்மைச் சம்பவம் பதிவாகியுள்ளது.
அப்படி என்ன கதையால் சம்பந்தம் குழம்பியது என்று நீங்கள் யோசிப்பது எமக்குப் புரிகின்றது. அந்தக்கதை என்னவென்று நீங்கள் பார்க்கும் போது உங்களை அறியாமலேயே சிரிப்பீர்கள்.
சரி அது என்ன ருசிகரமான கதை என்று அறிவோம்.
அண்மையில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.
கதை வழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என பெண்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு மாப்பிள்ளை.. ச்சிசி..ச்சிசி… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக சந்தோசமாக கூறியுள்ளார்.
அப்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார்.
இந்தக் கதையைக் கேட்ட மாப்பிள்ளையின் குடும்பத்தினர் கோபம் தலைக்கேற சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு உங்கட சம்பந்தம் வேண்டாம் என்று வெளியேறியுள்ளனர்.
குடிக்காமால் ஒழுக்கமாக இருந்தாலும் இப்படிக் கதைக்கிறார்களே என பெண் பார்க்கச் சென்ற மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு தெரிவித்து வருந்தி வருகிறார்.
