கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் சந்தியில் சற்றுமுன்னர் (08) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனமும், காரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரின் முன்பகுதி டிப்பர் வாகனத்துடன் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புன்னாலைக்கட்டுவன் நோக்கி சென்று கொண்டிருந்த கார், மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காரின் முன்பக்கம் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.
