மேடம் – வழக்கமான செயல்கள் வெற்றியாகும். புதிய நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். இலாபம் அதிகரிக்கும்.
இடபம் – மனதில் புதிய திட்டங்கள் உருவாகும். நண்பர்களின் ஆதரவை நாடுவீர்கள். மற்றவரை அனுசரித்துச் செல்வீர்கள்.
மிதுனம் – எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். உங்களது பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
கடகம் – எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். நண்பர்களின் உதவி நன்மையை உண்டாக்கும்.
சிம்மம் – தொழிலில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். பணியிடத்தில் உங்களுக்கு மதிப்பு உண்டாகும். உங்கள் தேவைகள் நிறைவேறும்.
கன்னி – நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பழைய அனுபவங்கள் கை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். சிலருக்கு வேலை குறித்த நல்ல செய்தி வரும்.
துலாம் – கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பிறரை அனுசரித்து செல்வது நல்லது. பணியிடத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம் – நண்பர்கள் உதவியுடன் ஒரு முயற்சியை மேற்கொள்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். புதிய செயல்கள் வெற்றியாகும். மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும்.
தனுசு – நீங்கள் எதிர்பார்த்தவை இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். இன்று மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
மகரம் – உங்கள் திறமை வெளிப்படும் நாள். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு கூடும். உங்கள் செயல்கள் வெற்றியாகும். நிதிநிலை உயரும்.
கும்பம் – திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். மறைமுக எதிரிகளால் சில சங்கடங்கள் தோன்றும்.
மீனம் – தைரியத்துடன் செயல்படுவீர்கள். நினைத்ததை நடத்தி முடித்து வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். உங்களது திறமை வெளிப்படும்.
