ஆட்டிறைச்சியின் எலும்பு குருதிக் குழாயில் மாட்டிக்கொண்டதால் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி – மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 46 வயதுடைய லோகேந்திரகுமார் மேரிஜெனிஸ்ரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி குறித்த பெண் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். இதன்போது ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.
மறுநாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வாய் ஊடாக கமரா செலுத்தி பரிசோதிப்பதற்கு வைத்தியர்கள் சிபாரிசு செய்த போதும் அவர் அதனை மறுத்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனையடுத்து மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பின்னர், அவருடைய உடலில் கமரா செலுத்தப்பட்டு பரிசோதித்த போது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி எடுத்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
