மட்டுவில் தெற்கு வளர்மதி பாலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா 08.03.2023 (புதன்கிழமை) மாலை 2.30 மணிக்கு மட்டுவில் வளர்மதி வி.கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வளர்மதி சனசமூக நிலையத் தலைவர் சி.தனுசன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி.நா.சிவமலர் (உப அதிபர் – யா/கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை) கலந்து சிறப்பித்தார்.
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாலர்களின் மேலைத்தேய வாத்தியக்கருவிகளின் இசையுடன் வரவேற்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
பாலகர்களின் கண்கவர் விளையாட்டு நிகழ்வுகள் பார்ப்போரை பிரமிக்க வைத்தது. அத்துடன் பாலர்களின் இடைவேளை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
இவ்விளையாட்டு நிகழ்வை வளர்மதி நிலையத்தின் தலைமைத்துவத்தில் வளர்மதி உப அமைப்புக்களின் ஒழுங்கமைப்போடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
