இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்களஸ் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (09) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குலத்தை கெடுக்கின்ற கோடரிக்காம்பு.
மயிலத்த மடுவிலே மாதுறு ஓயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்களமயப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ் பண்ணையாளர்கள் தொடர்சியாக தாக்கப்படுகின்றனர்.
தமிழ் பண்ணையார்களின் கால்நடைகளும் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது. இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்” – என்றார்.
