“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று (09) காலை ஆரம்பமாகியது.
116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றும்(09) நாளையும்(10) நாளை மறுதினமும்(11) என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது.
ஆரம்ப நிகழ்வு இன்று வியாழக்கிழமை (09) காலை 9 மணியளவில் இரண்டு கல்லூரி கீதங்களுடன் ஆரம்பித்ததுடன் இரண்டு கல்லூரி அணி வீரர்களும் கைலாகு கொடுத்து அறிமுகப்படுத்தினர்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியுள்ளது.
இப்போட்டித் தொடர்பான களநிலவரங்களை அறிந்துகொள்ள தமிழ்ஒளியுடன் இணைந்திருங்கள்.
