அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (09) முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவம், துறைமுகம், மின்சாரம், நீர் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கையில் பங்கேற்கின்றன.
