உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9ஆம் திகதி இடம்பெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய தேர்தலுக்கான தினம் தொடர்பில் ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
