வவுனியா – பூவரசங்குளம் – மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலம் காணப்பட்டுள்ளது.
நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30வயதுடைய சக்திவேல் யசோதரன் என்பவரே சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
