தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் பகுதியில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.
மல்லாகம் – 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (10) பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
