வவுனியாவில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார்.
வைத்தியர் ஒருவரின் மகனே தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்று மாலை நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். சம்பவத்தில் செந்தில்காந்தன் லக்சிகன் என்ற 26 வயதான இளைஞனே உயிரிழந்திருந்தார்.
2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ எடுத்து மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவாகியிருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
