யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 1 மணிக்கும் இடையிலேயே அவை களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரது வெள்ளை நிற மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனைச் திருடிச் செல்வது சி.சி.ரி.வி. கமெராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இலக்கமும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடிச் சென்ற நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் 3 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. ஒரு குழுவே இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளைத் மேற்க்கொண்டு வருகின்றனர்.
