வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி லண்டனுக்கு விஜயம் மேற்க்கொள்ளவுள்ளதாக அமைச்சின் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 15ஆம் திகதி லண்டன் மால்பரோ ஹவுஸில் உள்ள காமன்வெல்த் தலைமையகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கே லண்டன் பயணமாகின்றார்.
இக்கூட்டத்திற்கு முன்னதாக மார்ச் 13ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய தின கொண்டாட்டங்களிலும் வெளிவிவகார அமைச்சர் கலந்து கொள்வார்.
