நாட்டில் கிராமப் பகுதிகளில் உள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில், QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.
