நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அன்றைய தினம் பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை உறுப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
