தென்மராட்சியில் தலைசிறந்த சனசமூக நிலையங்களில் ஒன்றான மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் (ஆரம்ப கர்த்தா) மனைவி நாகமணி பூரணம் இன்று (14) சற்று முன்னர் காலமானதாக அப்பகுதி மக்கள் எமது செயதிப்பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தனனுடைய 86 வயதில் தன்னுடைய பிறந்து வளர்ந்த மண்ணில் இயற்கை எய்தியுள்ளார்.
வளர்மதி சனசமூக வளர்ச்சியில் ஸ்தாபகரின் பங்கு எவ்வாறு அமைந்ததோ அதே போன்று அன்னாரின் பங்கும் அளப்பெரியது என வளர்மதியின் முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்னாரில் மறைவினால் மட்டுவில் வளர்மதி கிராம மக்களிடம் சோகநிலை காணப்படுவதுடன், இவ்வாறான சமூக சிந்தனையுடன் வாழ்ந்தவர்களின் இழப்புக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு பேரிழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
சமூக சிந்தனையுடன் மட்டுவில் பகுதிக்கு தனது கணவருடன் சேர்ந்து அளப்பரிய சேவையாற்றி மறைந்துள்ள அன்னாருக்கு தமிழ் ஒளியின் ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கின்றோம்.
