யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், அவரது கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரும் இன்று (14) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
அவரின் கடையில் வேலை செய்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் இன்று மதியம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
அவர் தற்கொலை செய்த தகவல் குறித்த கடையில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளரும் மதிய உணவிற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.
நாவலர் வீதி – ஆனைப்பந்தியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடை உரிமையாளர் மற்றும் கடையின் பணியாளர் இருவரும் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தற்கொலை மரணங்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.
