யாழ்.மாநகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் பாடசாலையின் கட்டடத்தில் இருந்து தற்கொலை முயற்சியை மேற்க்கொண்ட நிலையில் தெய்வாதீனமாக உயிர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மாணவனின் தற்கொலை முயற்சிக்கு ஓரினசேர்க்கை வலையமைப்மே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவன் கணிணி விளையாட்டுக்கு அடிமையானவர், கணினி விளையாட்டுச் சவால்களை ஏற்றே தற்கொலை முயற்சி மேற்க்கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் குறித்த தகவல்கள் பொய்யென்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாணவனின் தற்கொலை முயற்சிக்கான காரணம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலையை குறிவைத்து ஓரினசேர்க்கை வலையமைப்பு உருவாக்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாணவன் தற்கொலை முயற்சியை மேற்க்கொள்வதற்கு முன்னர் 7 பக்க கடிதம் ஒன்றை எழுதி தனது புத்தகத்திற்குள் வைத்துள்ளார். அத்துடன் “தனது மரணத்திற்கான காரணம் எழுதிய கடிதம் புத்தகத்திற்குள் உள்ளது” என எழுதிய மற்றொரு கடிதம் குறித்த மாணவனின் காற்சட்டை பைக்குள் இருந்தது.
இந்நிலையில், குறித்த கடிதங்கள் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
மாணவன் எழுதிய கடிதத்தில் இருந்து குறித்த பாடசாலையை இலக்கு வைத்து ஓரினசேர்க்கை வலையமைப்பு உருவாக்கப்பட்டுவருதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த மாணவனால் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இரண்டு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒருவர் பாடசாலைக்கு அண்மையில் உள்ள கட்டடம் ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
குறித்தநபர், 14, 15, 16 வயதுடைய மாணவர்களை தனிமையாக அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதை காணொளியாக பதிவு செய்துள்ளார்.
மாணவர்கள் அவருடைய பிடியில் இருந்து விடுவதற்கு முயற்சி செய்த நிலையில், அந்தக் காணொளிகளை காண்பித்து மாணவர்களை மிரட்டியுள்ளார் போன்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
