யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், அவரது கடையில் பணியாற்றிய 21 வயது யுவதியும் தற்கொலை செய்து கொண்ட தகவலானது நேற்று (14) பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.
இந்நிலையில், இருவரின் மரணங்கள் தொடர்பாக பல வதந்திகள், பல கட்டுக்கதைகள் உலாவிய வண்ணம் உள்ளது.
மண்பிட்டி நாவாந்துறையைச் சேர்ந்த 21 வயதுடைய குறித்த யுவதி நேற்று (14) தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், குறித்த யுவதியின் மரணமானது யுவதி பணியாற்றிய நகைக்கடையின் ஊழியர்களுக்கு பரவியது. மதிய உணவிற்காக வீட்டுக்கு சென்று வருவதாக தெரிவித்து விட்டு கடை உரிமையாளர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
குறித்த யுவதி தற்கொலை செய்து ஒரு மணித்தியால இடைவெளியில் கடை உரிமையாளரான 44 வயதுடைய நடராசா கஜேந்திரனும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார்.
உரிமையாளரும், அந்தக்கடையில் பணியாற்றிய யுவதியும் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் பல விதமான கதைகள் பலராலும் வாய்க்கு வந்த விதத்தில் கதைக்கப்பட்டது.
ஆயினும், இத்தற்கொலை மரணங்கள் தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதால் தற்கொலைக்கான காரணங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஆயினும், குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வைத்தியர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறித்த பெண்ணுக்கும் உயிரிழந்த உரிமையாளருக்கும் இடையில் பால் உறவு இருந்தாக பேசப்பட்ட விடயம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இறக்கும் வரை முழுமையான கன்னிகை என்று பிரதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பேசப்பட்டு வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இருவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏழாமல் இல்லை.
இருப்பினும், குறித்த இருவர் மீதும் பேசப்பட்டு வந்த வதந்திகள், கட்டுக்கதைகள் அனைத்தும் பொய்யென்பது பிரேத பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் பொலிஸாரின் முழுமையான விசாரணைகள் நிறைவுற்றதுமே தெரியவரும்.
