கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்த மூன்று சிறுமிகள் காணமால் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
14, 15 மற்றும் 16 வயதுடைய சிறுமிகளே காணமால் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
