முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவருமான ஶ்ரீரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் ஶ்ரீரங்காவை கைது செய்யுமாறு வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வவுனியா- செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தின் மீது மோதியதில் அவருக்கு மெய்ப்பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இவ்வழக்கின் சாட்சியை மிரட்டியமை மற்றும் விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமை போன்ற காரணங்களுக்காகவே அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று பொலிஸரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
