வட்டுக்கோட்டை – அராலி சந்தியில் இன்று (18) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் நயினாதீவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
