மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய மாதர்சங்க உறுப்பினர்களின் ஏற்பாட்டில் உணவுத்திருவிழா நிகழ்வு இன்று (18) இடம்பெற்றது.
வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை உணவுத்திருவிழா சிறப்புற ஆரம்பமாகி இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான மங்கள விளக்கேற்றலோடு ஆரம்பமானது.
மங்களவிளக்கேற்றல் நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபரும், வளர்மதி கல்விக்கழக பொறுப்பாசிரியர் ச.கிருஷ்ணன், வளர்மதி சனசமூக நிலையச் செயலாளர் லக்ஸமணசிறி, வளர்மதி வி.கழக தலைவர் அமல்ராஜ் உட்பட பலர் பங்கெடுத்தனர்.
உணவுத்திருவிழா நிகழ்வில் ஏராளமான பெண்கள் ஆர்வத்தோடு பங்குபற்றி தமிழர்களின் பராம்பரிய உணவுகள், தற்கால உணவுவகைகள் என அனைத்தும் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மேற்க்கொள்ளப்பட்டது.
மாதர்களின் இப்படியான முன்மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று சிறப்புற தமிழ் ஒளி குழுமம் மனதார வாழ்த்துகின்றது.
புகைப்படப்பிடிப்பு – பி.றகுநாத்
