காங்கேசன்துறைக்கும் – தமிழகத்துக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் இந்த படகுச் சேவைக்கு இலங்கை உதவிகளை மாத்திரமே மேற்கொள்ளும் என்று நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
